பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 104

(வேறு)

“இருளைக் கடந்த ஒளி
       இதயங் கடந்த ஒலி
       இரண்டும் உருவம் பெற்றிடும்!
அருளைக் கிடந்துபெற
       அதிகந் தவமியற்றும்
       ஆசை பிறந்த தையனே!

கடலைக் கடந்த கரை
       கருணை நிறைந்த தரை
       கண்டு மகிழ்ந்து நின்றிடும்
உடலை உயிரை என்றன்
       உதரத் திருத்து பெறும்
       உணர்வு பிறந்த தையனே!

திசையைக் கடந்த வெளி
       திரியைக் கடந்த ஒளி
       சேர்ந்த இடத்தில் வளரும்
இசையைக் கடந்த குரல்
       எழுந்து துரத்தி வரும்
       இன்பம் பிறந்த தையனே!”

(வேறு)

என்றுருகி உரைக்கின்ற
       மாயை தன்னை
       எடுத்தணைத்தார் மன்னரவர்
       மார்பி னூடு!

கன்றுருகி அழைத்தகுரல்
       மீண்டும் காற்றிற்
       ‘கலகலனெ’க் கேட்டிடலும்
       அவர் எழுந்தார்!