|
விண்ணிற் புதிய வெளிச்சம் தோன்றி
மண்ணிற் படிந்து மழைபோல் நின்றது!
மலைக்கண வாய்கள் மல்கிருள் நீங்கி
உலைக்கள வாய்போல் ஒளிகொண் டிருந்தன!
அறநெறி காட்டும் அன்புச் சமணர்
பிறநெறி காட்டும் பெரியோர் எல்லாம்
பேரொளி கண்டு பிறப்பெடுக் கின்ற
‘மகாத்மா’வை மனத்துட் கருதி
“வருக தேவே! வருக!” என்று
வாழ்த்தினார் ஒளியை வையக மீதே!
அன்றைய இரவு :
(வேறு)
காற்றுவந்து தாலாட்டும்
காரிருளில் ஓர் கனவு!
நோற்றுவந்த மாயைக்கு
நூதனம் சொல்லிற்றே!
|