|
கனவு :
வெள்ளை யானையும் விண்மீனும்
(வேறு)
தந்தம் ஆறு
தன்முகம் நீண்டிட
வந்த யானை
வானின் றிறங்கியே
மாயை தன்னை
வலங்கொண்டு வெண்பனி
ஆய தான
நிறத்தை அடைந்ததே!
‘வெள்ளை யானை’
என்று புவித்தலம்
வேண்டு கின்ற
வேளை விரைவொடு
பிள்ளை யானை
பறந்தது விண்ணிலே!
பேசும் ஞானப்
பிலம்புகல் எண்ணியே!
|