பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 110

வைகறை

(வேறு)

ஆழியின் ஆர்ப்பொலி
       வான்முக டெட்டவும்
       அமரர்தம் ஊரிடை
       துந்துபி கொட்டவும்

வாழியென் றாதவன்
       வான்அரங் கெய்தவும்
       வையம் புலர்ந்தது
       வைகறை கூறி!

மாயையின் உள்ளம்
இயற்கைப் பொருட்களுடன் பேசுதல் :

செய்கரை, குன்றுகள்
       சோலைகள் தோறும்
       சிந்தும் கதிர்தந்த
       சித்திர வீட்டில்!

வைகறை வந்திட
       வையப் பொருட்கள்
       மாயை உள்ளத்தில்
       மகிழ்ந்தொலி செய்யும்!

மாயை

(வேறு)

“குளத்து நீரில் எட்டிப் பார்க்கும்
கோமள வல்லி! - உன்
உளத்து நீரில் ஒளிந்த தென்ன?
ஒப்புவை சொல்லி?”