பக்கம் எண் :

111தமிழ்ஒளி கவிதைகள்

தாமரை :

“கனவுகண்டு விழித்தெ ழுந்தேன்
கதிரவன் வந்தான் - என்
நனவுபோலத் தோன்றுதம்மா!
நான்என்ன சொல்வேன்?”

திசைகள் :

“உலக மெங்கும் ஒளிபரப்பும்
ஒண்சுடர் வந்தான் - உயர்
விண்சுடர் வந்தான் - பெண்
திலகம் உன்றன் வயிற்றில்வைகிப்
பிறந்திட வந்தான் - மண்
சிறந்திட வந்தான்!

வையமென்ற மகளை நாடி
மணந்திட வந்தான் - மனம்
மகிழ்ந்திட வந்தான் - இதில்
ஐயமில்லை! மாயைச் செல்வி!
அன்னைநீ ஆனாய் - பேர்
அன்னை நீ ஆனாய்!”

(வேறு)

கிளர்திசையும் தாமரையும்
       கூறா நிற்கக்
       கேட்டிருந்த பெண்அன்னம்
       கண்வி ழித்தாள்!
வளர்கனவு போல்நின்ற
       இமயத் தின்மேல்
       வைகறையின் முதற்சுடர் போய்
       வண்ணந் தீட்டும்!