|
சுடரென்ன எழுந்தாள்! அத்
தோகை நல்லாள்!
துயரொன்றும் நெடுநாளாய்த்
துரத்தி வந்த
இடரொன்றும் இனியில்லை
என்று நெஞ்சில்
இழைந்துவருங் குரல்கேட்டாள்!
இன்ப முற்றாள்!
எதிர்வந்த மன்னரடி
பணிந்தாள்! ஆங்கே
‘இரு’வென்ன இருவரும்
அமர்ந்தார்! இன்பப்
புதிர்வந்த நற்கனவை
உரைத்தாள்! மன்னர்
புகழ்வந்த நகைசெய்தார்!
‘ஆய்வோம்’ என்றார்!
கனவறிந்து பலன்கூறும்
பெரியோர் வந்தார்!
காவலர்அக் கனவுதனை
விரித்துக் கூற
இனமறிந்தார்; “இப்புவியில்
இதுபோற் பேற்றை
எய்தியவர் இலர்” என்றார்
கனவு நூலார்!
|