|
கனவின் பலனைக் கூறுதல்:
“காவலரே! சாத்திரங்கள்
சாற்றக் கேளும்!
கதிர்நுழைய விலாப்புறத்திற்
கனவு கண்டால்
ஏவலராய் மன்னர்பலர்
வணங்கா நின்ற
ஏற்றமிகும் ஒருமைந்தன்
பிறத்தல் உண்மை!
பூவனைய மதிபுகவுங்
காண்பா ளாகில்
புவிமுதல்வன் எனுந்தோன்றற்
சனனஞ் செய்வான்!
ஆவலுடன் வெண்வேழம்
நுழையு மாகில்
அவள் பெறுவாள் அறிவுலக
அமரன் றன்னை!
திசைகாட்டும் விண்மீனாய்
நுழையு மாகில்
திக்கெல்லாம் ஒளிகாட்டுந்
தெய்வ மாவான்!
இசைகாட்டும் குரலாலே
அறத்தைக் கூறி
இருள்காட்டும் வினைதீர்ப்பான்!
என்றார் மேலும்!
|