|
“இல்லறத்தில் நிற்பானேல்
‘இவனே மன்னன்’
எனவையம் முடிதாழ்த்தும்!
துறவு போற்றும்
தொல்லறத்தில் நிற்பானேல்
உலகிற் கெல்லாம்
சோதியாய்ச் சுடர்செய்வான்”
என்று சொன்னார்!
மாதாவைக் கண்மணிபோற்
காக்க வேண்டும்
‘மானிலத்தின் பெருந்துயரை
நீக்கு கின்ற
தாதாவைக் கருவுயிர்த்தாள்’
என்று கூறித்
தார்வேந்தர் தமை வணங்கி
நின்றார் நூலோர்!
மன்னர்தம் உளத்தின் வழி
உவகை பொங்க
மறையோர்க்குப் பரிசுகள்
அள்ளித் தந்தார்!
கின்னரரும் இசைமீட்டி
விண்ணிற் சென்றார்!
கீழத்திசையிற் கடலலைகள்
கிளர்ந்த மாதோ!
|