பக்கம் எண் :

117தமிழ்ஒளி கவிதைகள்

மாயை தேவதாக நகருக்குச் செல்லுதல் :

(வேறு)

தேவ தாக
       நகர்வரை சென்றிடும்
       செய்ய சாலை
       திருத்தி அமைத்தனர்!
‘ஆவ தாக
       மங்களம்!’ என்றுமே
       அற்புதத் தொடு
       பந்தர் அமைத்தனர்!

அகிற்புகை முகில்
       ஆகக் களித்தனர்!
       ஆன மான்மத
       நீரைத் தெளித்தனர்
துகிற்கரம் எனத்
       துவசம் எடுத்தனர்!
       சோதிகொண் மலர்
       தூவி விடுத்தனர்!

வானம் என்று
       விளங்கிய பந்தரும்
       வையம் என்று
       விளங்கிய மாந்தரும்
ஞானம் ஒன்று
       பிறப்பதை நோக்கியே
       நங்கை யோடு
       நகரில் நிறைந்தனர்!