பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 118

மாயையை அலங்கரித்தல் :

(வேறு)

தெய்வச் சிலையை
       அலங்கரிக்கும் ஒரு
       செய்கை போல்,
பொய்கையிலே மலர்
       பூத்துப் பொலிந்த
       புதுமை போல்,
மாயை தனக்கு
       மகிழ்ந்து மலரணி
       சாற்றினர்!
தாயைத் தொழுது
       தவத்தைத் தொழுதிடும்
       சாக்கியர்!

மாயையை
முத்துச் சிவிகையில் ஏற்றிச் செல்லுதல் :

முத்துச் சிவிகையில்
       ஏற்றி வழிநடை
       முந்தினர்!
கொத்துச் சரங்கள்
       குலுங்கி ஒலித்தன
       கும்பலில்!

(வேறு)

ஆடலும் பாடலும்
       ஆயின முன்முனர்
       ஆகவே!
நீடலும் கார்கடல்
       போன்று நிறைந்தனர்
       சாக்கியர்!