பக்கம் எண் :

119தமிழ்ஒளி கவிதைகள்

(வேறு)

பன்னிறம் பொலிந்த வீதி
       படர்ந்தவான் வில்ல தாக
மின்னிறம் பொலிந்து தோன்ற
       வெண்மதி சென்ற வாறு,

சிவிகையில் மாயை செல்லத்
       தேசமும் புகழ்ந்து சொல்லக்
கவிகையும் கரியும் மாவும்
       கவிந்தன மேக மென்றே!

பயணம் :

(வேறு)

முத்தொளி பெற
       முழுநில வென
       முன்வரும் சிவிகை - அதன்
புத்தொளி யெனப்
       புகழ் வடிவெனப்
       பொலிவுறும் கவிகை!

முழக்கொலி பெற
       முகிற்குலம் என
       முன் செல மனிதர் - அவர்
உழக்கொலி எழ
       உறுதுயர் விழ
       உவந்தனர் புனிதர்!

வாழ்த்தினர் "சிலர்!
       வணங்கினர் பலர்!
       வருந்தினர் இலரே - முடி
தாழ்த்தினர் சிலர்!
       தழுவினர் பலர்!
       தவறினர் இலரே!