|
நீந்தினர் சிலர்!
நின்றனர் இலர்!
நெருங்கினர் பலரே - கொடி
ஏந்தினர் சிலர்
இணைந்தனர் பலர்!
இடறினர் இலரே!
(வேறு)
உலும்பினி வனத்தைக் கண்டாள்
ஒருபது கற்கள் நீங்கி!
எலும்பிலும் இனிமை பாய
‘இவண்சற்று நில்லும்’ என்றாள்!
சிவிகையைத் தாழ்த்த லோடும்
சித்திரம் நிகர்த்த மாயை
புவிமகிழ்ந் தேற்கும் ஞானப்
புகழ்என இறங்கி நின்றாள்!
ஒய்வுற வனத்துட் சென்ற
ஒருமின்னற் கொடிய னாளை
ஆய்வுறுங் குழாத்தி னோரும்
அணுகினர் சூழ்ந்து சென்றார்!
|