பக்கம் எண் :

121தமிழ்ஒளி கவிதைகள்

உலும்பினி வனத்தின் தோற்றம் :

(வேறு)

மேகத்தை நோக்கி வளர்ந்த
       மரங்கள் விழைந்தன - அவை
தாகத்தைத் தீர்க்கும்படி தண்ணீர்
       கேட்கத் தழைந்தன!

கொண்டல் முழங்கி முழங்கி
       மழைச்சலங் கொட்டின - அதை
உண்டு வளர்ந்தமரந் தலையால்
       விண்ணை முட்டின!

மாயையைக் கண்ட உலும்பினிக்
       காடு மகிழ்ந்தது - தன்
தாயை எதிர்கண்ட மைந்தன்என்
       றுள்ளம் நெகிழ்ந்தது!

வானை எதிர்த்த மரங்கள்
       வளைந்து வணங்கின - அறச்
சேனைக் கதிபதி தன்னை
       அவள்அளிப் பாள்என!

(வேறு)

கிள்ளைதனை நிகர்மகளிர்
       கேண்மை சொல்லக்
       கிளர்மரங்கள் மலர்வீசக்
       “கீர்த்தி ஓங்கும்

பிள்ளைதனை நீமாயை
       பெறுக!” என்றே
       பேரோசை எழுந்ததவ்
       வனத்தி னுள்ளே!