வளைகளும் பறவைகள்
வரிக்குரல் இசைகளும்
வலுவுற வார்த்தனவே!
கிளைகளும் மலர்களும்
முனிவர்தம் உளமெனக்
கீழ்ப்படிந் திருந்தனவே!
(வேறு)
பச்சைமயில் அதுபோலே
பார்க்கப் பார்க்கப்
பார்வைதனைத் தன்பக்கம்
இழுப்ப தாகி
இச்சைகொள நிற்கின்ற
எழிற்ப லாதன்
எதிர்நின்ற மாயைதனை
இசைந்து நோக்கும்!
உளங்கவர்ந்த அத்தருவை
உற்று நோக்கி
“ஒருசிறிது நாம்தாங்கிச்
செல்வோம்” என்றே
குளங்கவரும் மலரன்னாள்
மாயை கடவுக்
கூட்டத்தார் கைகூப்பி
“விருப்பம்” என்றார்!
|