காடு கூறும் செய்தி :
(வேறு)
யார் பிறந்தது பார் எனப்புவி
யெங்கும் - சுடர்
தங்கும்! - பெரும்
சீர் பிறந்தது கேள் எனத்திசை
தோறும் - இசை
சேரும்!
போர் பிறந்திடும் மண்ணில் இனிசமா
தானம் - நல்
ஞானம்! - கதிர்த்
தேர்மிசை ஒரு பாலகன் அவன்
தெய்வம் - நாம்
உய்வம்!
புத்தன் எனப்பெயர் பெற்றவனின் கழல்
வணங்கு - நீ
இணங்கு! - அவன்
சித்திரம்போல்ஒரு சின்னக் குழந்தை போல்
வந்தான் - களி
தந்தான்!
ஆளும் அரசர்க் கரசன் எனப்புவி
போற்றும் - புகழ்
சாற்றும்! - இனி
நாளும் அவன்பெயர் நம்செவி ஏற்றிடும்
நாதம் - உயர்
கீதம்!
|