பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 128

நகர் அலங்காரம்

(வேறு)

தள்ளும் குலைவாழை
       தன்னை வாசல்களில்
       சார்த்தினார் - புகழ்
       போர்த்தினார் - மணம்
அள்ளும் மலர்ப்பந்தல்
       இட்டு மகிழ்ச்சியில்
       ஆடினார் - விரைந்
       தோடினார்!

தாரணி ஆள
       வருகின் றவன்பெயர்
       சாற்றினார் - சுடர்
       ஏற்றினார்! - இலைத்
தோரணங்கள் எங்கும்
       கட்டி மணிக்கொடி
       தூக்கினார் - நலம்
       தேக்கினார்!

இந்திரன் வந்து
       பிறந்தவிழாஎன்
       றியம்பினார் - பல்
       இயத்தினார் - ஓரு
மந்திரம் போலும்
       இசையிற் குளித்தனர்
       மாந்தர்கள் - அதோ,
       வேந்தர்கள்!

சாக்கியர் வந்து
       நிறைந்த பெருந்திரள்
       சாடவே - இருள்
       ஓடவே - செய்தி
போக்கிய தால்வந்து
       சேர்ந்தனர் வாணிகர்,
       அந்தணர் - ஆசி,
       தந்தனர்!