மனங்குழம்பி மாயையவள் மைந்த னோடு
மலர்போலும் வாய் திறந்து பேச லுற்றாள்!
சினந்தளர்ந்து பற்றற்று ஞாலங் காத்துச்
செயற்கரிய செயல்எண்ணும் செல்வன் ஆங்கே,
வனந்துய்க்கும் கனவில்ஓர் மலரைப் போலும்
வற்றாத நதியில்ஓர் அலையைப் போலும்
இனந்தெரியா இசைபிலிற்றும் யாழைப் போலும்
இடர்இன்றிப் புன்னகைகொண் டிருந்தான் மன்னோ!
இரண்டாம்
நாள்-மாயா :
(வேறு)
என்றன்
வயிற்றிற்
பிறந்தகற் பூரமே!
என்னம்மா, என்னைநீ
பார்க்கிறாய்? -அன்னை
இன்மொழி கேட்கவோ
பார்க்கிறாய்?
(வேறு)
காட்டுக்கு
நீமட்டும்
வேட்டை
யாடச் சென்றால்
காட்டிற் புலிவரும் கண்மணி! - நம்
நாட்டுக் குரியநீ நல்ல மனிதரை
நாடி மகிழ்வுறு செல்வமே! - விளை
யாடி
மகிழ்வுறு செல்வமே!
|