பக்கம் எண் :

133தமிழ்ஒளி கவிதைகள்

மூன்றாம் நாள் :

இல்லறம் விட்டுநீ
முற்றுந் துறந்திட
எண்ணி யிருப்பதாய்
எண்ணினேன் - நான்
சொல்வதைக் கேள்மக னேஒரு தோகைக்குச்
சூடுமணந்திகழ் மாலையை! - நற்காலையில்!

நான்காம் நாள் :

காடு மலைகளிற்
சென்று தவஞ்செயும்
காலம் வரும்என்றா பார்க்கிறாய்? - இமை சேர்க்கிறாய்?

நீடு தவஞ் செய்து
பெற்றெடுத் தேன்உன்னை
நீயும் தவஞ்செய்தால் தாங்குமோ? - குடி ஓங்குமோ?

(வேறு)

ஐந்தாம் நாள் :

காவி உடையொடு கால்கடுக்கச் சுற்றிக்
காட்டிடை நீ திரிந்தாய்!
“பாவிநான்” என்று பதறவும் நீஎனைப்
பார்த்து நகை புரிந்தாய்!