பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 134

ஆறாம் நாள் :

காலமெ லாம்உனக் காகவ ருந்திநான்
காத்திருந் தேன்என்றன் செல்வமே!
ஞாலமெ லாம்உனைப் போற்றி வணங்கிடும்
நாளில்நான் மீண்டும் வருகிறேன்!

ஏழாம் நாள் : மாயாதேவியின் மரணம் !

(வேறு)

மாயா தேவிதன் மைந்தன் முகத்தை
மார்பில் ஏந்தி மகிழ்ந்து நோக்கி
“கண்ணே! இன்று கடைசிநாள் வந்தது!
விண்ணே பிளந்து விரிந்தது வீதியாய்!
செல்வேன்” என்று சென்றனள் மாயா!
...............

(காவியம் மேலும் தொடராமல் நின்றது)