பக்கம் எண் :

135தமிழ்ஒளி கவிதைகள்

பின்குறிப்பு :

1958இல் ‘மாதவி காவியம்’ எழுதி முடித்தபோது கவிஞர்
வயது  முப்பத்து நான்கு.

சூலுற்ற மேகம் போல் முதிர்ந்த மனநிலை. எழுதிய
வேகத்தில்  நூல் அச்சாகும் வாய்ப்பிருந்தால், காவியங்கள்
பலவற்றை அவரால் படைத்திருக்க முடியும். தமிழ்
வளர்க்கும் பதிப்பகங்கள் அவரை  அரவணைக்க
முன்வரவில்லை.

கவிஞரும் நானும் சென்று ‘போதி மாதவன்’, ‘தம்மபதம்’ 
நூல்களை வாங்கி வந்தோம்.

நூல்கள் இரண்டினையும் ஆர்வமுடன் படித்த கவிஞருக்கு, 
புத்த பகவரின் புண்ணிய சரிதத்தைக் காவியமாகப் படைக்கும் எண்ணம் எழுந்தது. எழுதத் தொடங்கினார். கபிலை நகரமும்,
உரோகிணி  ஆறும் கவிஞருக்கு நல்வரவு கூறின.

மன்னர் சுத்தோதனரின் பெருமையும், அன்னை
மாயாதேவியின் மனத்தவமும் மனத்தில் இலயித்தன.

அழகிய சந்தங்களில் கவிதை ஆறாய்ப் பெருகியது.

அன்னை மாயாதேவி கனவின் பயன் தெளிந்து, தாய்மை
எய்தி, உலும்பினிவனத்தில் தவப்புதல்வனை ஈன்ற
செய்தியுடன் காவியப்  பணி தடைப்பட்டதைக் கண்டேன்.

வினவியபோது, ‘மாதவி காவியம்’ வெளிவரட்டும் பின்னர்
‘புத்தர் காவியத்தை முடிப்போம்’ என்றார்.

அதன்பின் அவராக எழுதத் தொடங்கி, கபிலை நகரம்,
தாயையும் தவப்புதல்வனையும் வரவேற்று விழா எடுப்பதும்,