பக்கம் எண் :

137தமிழ்ஒளி கவிதைகள்

பிற்சேர்க்கை :

பாமாலை

வாழ்க, தமிழ்ஒளியின் புகழ்!

கவிஞர் "தமிழ் ஒளி" என் நண்பர். பாரதிதாசன் பரம்பரைக்
கவிஞர். பாரதிதாசனால் பாராட்டப் பெற்றவர். அவருடைய
கவிதைகள் முன்னோடியாகத் திகழ்பவை, வரும்
செப்டம்பர் 21 அவருக்கு எழுபத்தைந்தாவது
பிறந்த நாள் என அறிந்து நான் மகிழ்ச்சி 
அடைகிறேன்.

குறைந்த வயதில் மறைந்த அவருடைய கவிதைப்
படைப்புகள் நிறைவானவை. நாம் அவரைப்
பெருமைப்படுத்தும் வகையில்,  அவருக்குச் சிலை வைக்க
வேண்டும். அவர் பெயரால் அறக்கட்டளை
நிறுவி வருங்காலத் தலைமுறை, தமிழ் ஒளியின்
கவிதைச்  சிறப்புக்களை அறியுமாறு செய்திடல் வேண்டும்.

இதுவே, அவருடைய கவிதைப் பணிக்கு நாம் செய்யும் 
கைம்மாறு ஆகும்.

வாழ்க, தமிழ்ஒளியின் புகழ்!

செப்டம்பர் 1998 உவமைக் கவிஞர் ‘சுரதா’

(கவிஞரின் பவள விழா நாளில் வழங்கிய
வாழ்த்துச் செய்தி)