பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 142

சாகு(ம்)வரை பாதொ டுத்த
       சன்யாசிப் புலவன்! நாட்டை
வேகவைத்த புழுக்கந் தன்னை
       வெந்தணலை ஆற்று தற்கே
மோகனப்பூந் தென்றல் போல,
       முல்லைப்பூக் கவிதை பாடி
தாகத்தைத் தீர்த்து வந்தோன்!
       தாகமொடு வாழ்ந்தி ருந்தோன்!

பாதியிலே வாழ்க்கை என்னும்
       பயணத்தை முடித்துக் கொண்ட
கீதமழை பொழிந்த கிள்ளை!
       ‘கித்தாப்’பே அறியாப் பிள்ளை
வீதியிலே வாழ்வோர் தங்கள்
       விதியினைக் கிழிப்ப தற்கே
மோதியதோர் புயலின் வேகம்!
       முறியாத மறவன் கைவாள்!

-கவிஞர் வல்லம் வேங்கடபதி

5. யாழைப்போல் பாட்டுக்காரன்

யாப்பைப்போல் கெட்டிக்காரன்!
யாழைப்போல் பாட்டுக்காரன்!
தோப்பைப்போல் பழுத்த செய்யுள்
தொடுக்கின்ற மேன்மையாளன்!
சீப்புத்தார் வாழை மட்டை
சிறுத்தல்போல் நோயில் வீழ்ந்தான்
காப்பதற்கோர் துணையு மின்றி
காலத்தைத் தனியாய்ப் போட்டான்?

-கவிஞர் காவிரிநாடன்