பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 19

சிற்றோடையில் நதிபோன்றிடு
        செல்வப்புனல் பெருகும்!
வற்றும்குளம் கால்வாய்தொறும் 
        வரும் நீர் மிகை யாகும்!
சுற்றுப்புறம் எங்கும் நகை
        சுடரேற்றிடும் வெள்ளம்!
கற்றோர் உளம் போலாகிடும்
        களிநீர்த்துறை யாவும்!

அரசாண்டிடு மன்னர் முடி
        அடிசாய்வது போலே
மரம் வீழ்வுறும்; அப்போதினில்
        வாள்வீசிடும் காற்று!
வரப் போகிற புரட்சிப் புயல்
        ‘வரும் இப்படி’ என்றே
பெருமாமழை பொழியும், இது
        பெருஞ்சோதனைக் காலம்!

‘அமுதசுரபி’ - 1949