கள்ள மிருந்தக்கால்
காணும்வழி அச்சுறுத்தும்!
உள்ள மிசைந்தாலோ
உறுதி தளராதாம்!
போகும்வழி தூரமென்று
பூமிதனில் அஞ்சிடிலோ
சாகும்வரை நீந்துமிந்த
சமுத்திரமும் தூரமன்றோ?
தூரமென்று சொல்வதுதான்
சோம்பலற்ற நல்வாழ்வு!
தூரமில்லை என்பதெலாம்
தூரத்துப் பச்சையன்றோ?
உழைக்காமல் யாதுபயன்?
ஓய்ந்தார்க்கு வெற்றியுண்டோ?
அழைக்கின்றாள் கொல்லிமலை
ஆரணங்கு; செல்லுகின்றேன்!
‘யாத்திரை’ 1950
‘சக்தி’ வெளியீடு
|