‘எட்டா எவரெஸ்டை
எட்டிவிட்டோம்’ என்றென்று
கொட்டிடுக வான்முரசம்!
கூறிடுக வாழ்த்தொலிகள்!
தட்டிடுக வான்முகட்டைத்!
தாவிடுக அந்தரமேல்!
தொட்டிடுக வெண்மதியைத்
தோள்கொட்டி ஆடிடுக!
‘அமுதசுரபி’ - ஜீலை 1953
குறிப்பு :
‘தேன்சிங்’ என்ற இந்திய வீரன் இமய உச்சியில் ஏறிக் கொடி நாட்டிய செய்தியைக் கூறும் பாடல்.
|