புனல் மகள்
தனந் தன மெனப் புனல்மகள்
நடமாடுவாள் - தகித்
ததிங்கிணம் கிணம் கிணமெனநடை
தத்தித் தளாங்கு கறைஇரு புடை
-தனந்தனமெனப்
வனந் தரும்குளிர் நிழலிடை
எழில் மிஞ்சி - கை
வளை யொலியொடு கொஞ்சி
வரும் வஞ்சி
-தனந்தனமெனப்
தனந் தனத் தனம்
ததிங் கிணத் தனம்
தகிதி தத்தம்
தத்த தந்தமெனத்
தாம் தாமெனும்
தரங் கங்க ளொடு
-தனந்தனமெனப்
கலகலவெனக் கால்வாய்களிற்
காற்சிலம்பொடும் ஓடி - விழி
கவர்ந்திடும் இடம் தேடி
சலசல வெனத் தமிழ்தரும் பதம்
தகும் தகுமெனப் பாடி
உளம் கூடி
விளை யாடி
-தனந்தனமெனப்
உதவியவர் : த. ஜெயகாந்தன் - 1954
|