சாளர மீது தவழ்ந்த சிறுதிரை
தன்னை யகற்றிட ஞாலமிசை
வேளையும் வந்தது வேனிலும் வந்தது
வீதியில் மன்மதன் வந்ததென்றார்?
சென்று மறைவன நாட்களும் மாதமும்
தேய்ந்திடும் திங்களும் ஓர் பிறையாய்!
என்று வருவை நீ என்னுயிர்க் காதலி
ஏங்கும் அழுகுரல் கேட்டிலையோ?
உதவியவர் : த.ஜெயகாந்தன் - 1954
|