நேரம் கிடக்குது தூரம் கிடக்குது
நீண்ட வழிப்பயணம் - இது
நீண்ட வழிப்பயணம்!
பாரம் நெருங்குது பாதை சறுக்குது
கெட்ட வழிப்பயணம் - கடன்
பட்ட வழிப்பயணம்!
போது குறுகுது போதை பெருகுது
போகும் வழிப்பயணம்! - உயிர்
போகும் வழிப்பயணம்!
வாது பெருகுது வம்பு வருகுது
வாழ்க்கை வழிப்பயணம்!-இது
வாழ்க்கை வழிப்பயணம்!
‘மனிதன்’ - 1954
‘கலைமகள்’ -1958
|