பக்கம் எண் :

4தமிழ்ஒளி கவிதைகள்

எழில்தந்த தமிழ்மணிகள் இரண்டும் இன்று
இருட்சிறையில் கிடப்பதுவோ? தமிழ கத்தின்
விழிபெருக்கும் நீர்கண்டீர்! கதறல் கேட்டீர்!
விளைந்துவருந் துயர்காண்பீர் கருணை யொன்றே
பழகும்உளங் கொண்டவரே தமிழ்நாட் டாரே!
பழியில்லை! இதில்கட்சிப் பேத மில்லை!
அழுகுரல்உம் காதினிலே கேட்ட பின்னும்
ஆதரவு தரமுயலா திருக்க லாமோ?

‘திராவிட நாடு’ 6.1.1946

குறிப்பு :

தமிழ்த் திரையுலகில் புகழுடன் விளங்கிய கலைவாணர்
என்.எஸ்.கிருஷ்ணன்., எம்.கே.தியாகராஜ பாகவதர்

இருவரும் ஒரு வழக்கு காரணமாகச் சிறையில்
வைக்கப்பட்டனர்.

அவர்களை விடுதலை செய்யக் கோரி தமிழ் மக்கள்
இயக்கம் நடத்தினர்.

அதனை ஆதரித்துக் கவிஞர் படைத்த கவிதை இது.