பக்கம் எண் :

40தமிழ்ஒளி கவிதைகள்

(வேறு)

மோன நாடகங் கண்டீர்!
முகிலென்ற திரை கண்டீர்!
ஞான நாடகங் கண்டீர், 
நற்கிர கணங் கண்டீர்!

(வேறு)

“பிடித்தது கிரகணப் பெண்
பேய்” எனப் பழிக்க வேண்டாம்!
படித்தது மறந்து வீணிற்
பழித்திடு மடமை தன்னை
ஒடித்தது காதல் என்ற
ஒருதிரை! ஆழி சுற்றி
அடித்தது! கதிர்வி ளக்கம்
அணைந்திட அணைந்த தன்றே!

‘உமா’ - 1955