பக்கம் எண் :

44தமிழ்ஒளி கவிதைகள்

பாடும் பறவைகள்
        கூடி உனக்கொரு
        பாடல் புனைந்ததுவும்,
மூடு பனித்திரை
        யூடு புவிக்கொரு
        மோகங் கொடுத்ததுவும்;
ஆடுங் கிளைமிசை
        ஏறிச் சிறுவர்
        குதிரை விடுத்ததுவும்,
ஏடு தருங்கதை
        யாக முடிந்தன!
        இன்று வெறுங்கனவே!

‘அமுதசுரபி’ - 1955