பக்கம் எண் :

59தமிழ்ஒளி கவிதைகள்

மாமலர்க் கன்னி
        மலர்ந்திட வண்டுகள்
        வந்து புடைசூழ
‘மாமன் மகள்இவள்”
        என்று வளர்மதி
        மாலை எடுத்தேக,
காமர் தடத்தில்
        மலர்ந்திடும் அல்லிகள்
        காதல் மொழிகூறக்,
கோமள வல்லி
        வசந்த மனோகரி
        கொஞ்சிட வந்தாளே!

‘கலைமகள்’ - 1956