பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 60

கவிமணிக்கு வாழ்த்து!

‘தத்ததிமி’ என்றுகடல் மத்தளம் முழங்கச்
சித்தமகிழ் வுற்றநட மிட்ட குமரிக்கு
முத்துமலர் மாலைபரி சென்றுதவு கின்ற
முத்தமிழி சைக்கவி மணிக்கவிஞர் வாழ்க!

- கவிமணி தேசிக விநாயகம் நினைவு மலர் - 1956
உதவி : த. ஜெயகாந்தன்