“காவலும் கட்டுக்களும் - ஒரு
கன்னியின் உள்ளம்வளர்
ஆவலை வென்றதில்லை - நீ
அறிக” என்றுரைத்தேன்!
முள்ளுக்கும் வெட்கம்வர - மலர்
மோகினி பக்கம்வர
எள்ளுக்குள் எண்ணெயென - அவள்
என்னுட் புகுந்துவிட்டாள்!
வாளை வெறுத்துவிட்டாள் - நான்
வாரி அனைத்துக்கொண்டேன்!
தோளைச் சரண்அடைந்தாள் - நான்
தொட்டு மோந்துவிட்டேன்!
‘கலைமகள்’ - 1957
|
|
|