பக்கம் எண் :

65தமிழ்ஒளி கவிதைகள்

தொற்றும் வீணர்கள்....

ஊமைதான் பேசுமோ? உடுக்கை அடித்தால்
ஆமை பறக்குமோ ஆகாயம்? - ஆமையா,
தொற்றும் வீணர்களைத் தூக்குகிறீர் பறக்க
உற்றசிற குண்டோ, உரை?

நெற்றிவிழி ... அஞ்சனம்...

‘சாமிகாண், எல்லாருஞ் சார்ந்து நடமாடுஞ்
சாமிகாண்!’ என்கிறது சாத்திரமே - ஆமிவர்க்கும்,
நெஞ்சில் விடமுண்டு! ‘நெற்றி விழி’ யென்ற
அஞ்சன’மும் உண்டல்ல வா?

கையெழுத்துப்படி - 1957