மழை
இடிகொட்டக் கார்முகில்
முடிமுட்ட ஆகாயம்
எங்கும் பெருங்கூட்டம் - வான்
என்ற அரங்காட்டம்!
கைகொட்டக் கார்முகில்
மைதொட்ட நயனத்தி
என்றமின்னற் கொழுந்தாள் - தடம்
இட்டிடறி விழுந்தாள்!
இரைகின்ற ஆர்ப்பாட்டம்!
இருளுக்குக் கொண்டாட்டம்!
என்றுமின்னல் அழுதாள் - கண்
ணீரால் நிலம் உழுதாள்!
‘கலைமகள்’ - 1958
|