மக்கள் தொடுத்திடும் யுத்தம் - என
வானமும் மண்ணும் இருண்டு நடுங்க,
செக்கென ஆட்டுது காற்று - பெருஞ்
செல்வர், மணிமுடி, சட்டம், சிறைகள்
பொக்கென வீழ்வது போலே - யாவும்
போயின பொட்டென்று விட்டது காற்று!
செக்கச் சிவந்தது வானம் - அன்னை
சேல்விழி காட்டினள் வந்தது காலை!
‘சிந்தனை’ - 1947
‘தாமரை’ - 1960
|