பக்கம் எண் :

81தமிழ்ஒளி கவிதைகள்

‘திங்களைப் பற்றினோம் செவ்வாயைச் சுற்றினோம்
       பொங்கும் புதன்கண்டோம்! புகன்ற வியாழனொடு
       எங்கும் சுடர்வெள்ளி ஏறும் சனிகண்டோம்!

ஞாயிற்றின் பேரொளியை நாட்கள் பிறக்கின்ற
       வாயிலை நாம் கடந்து வான்கதவந் தான்திறப்போம்!’

என்றே அணுக்கள் இடிக்குரலில் கொக்கரிக்க
       இன்றுநம் யாத்திரை இன்றே தொடங்கிற்று!

பூதங்கள் யாவும் புவிப்பொருள் காட்டுகின்ற
       நாதங்கள் ஆயின! நாம் மகிழ்ந் தாடுவமே! 

‘ஜனசக்தி’ - 1959