புத்தர் பிறந்தார்
கபிலை நகரின் சிறப்பு!
சந்தனந் தேக்கு மரங்கள்
வந்தனஞ் செய்து வளர்ந்து
சாக்கியர் புகனெநின் றாடுமே - ஆடுந்
தாளத்தைக் கற்கும்பறவை பாடுமே!
ஆறுகள் பெருக வயற்
கூறுகள் பெருகி மணி
ஆக்கிய விளைவுமலை போலுமே - மயில்
அகவி வயல்களிடை ஆலுமே!
நாடுயர் கோசலந் தனிற்
பீடுடன் இருந்த தலை
நகரம் *‘கபிலை’ என்றபேருடன் - புகழ்
நட்பில் வளர்ந்ததுநல் லோருடன்!
விழுது விரல்க ளாலே
எழுதும் ஆல மரங்கள்
விரிந்து காவியநிழல் ஆக்குமே - குளிர்
விளைந்து மனத்துயரம் போக்குமே!
சித்திரம் திகழ்ந்த தெனப்
Y‘பத்திரம், தகரம்’ இவை
சிந்திய மணம்நகரைப் போர்க்குமே - வண்டு
சென்று புகழிசைகள் ஆர்க்குமே!
* கபிலை : கபிலவாஸ்த்து
Y ‘பத்திரம், தகரம்’ என்பன மலர் வகை.
|