பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 94

(வேறு)

‘ஆண்டுகள் ஆயிரம்
       ஆயிரம் செல்லவும்
              அப்புறம் வைகறையில்
ஈண்டு பிறந்திடும்
       புண்ணியம்!’ என்பதும்
              இப்புவிதன் சரிதம்!

அவ்வொரு சரிதை
       அன்பொடு பாடிய
              ஆறு நடந்துசெல
எவ்வரும் போற்றினர்!
       உரோகிணி என்பதை
              என்ன வியப்பெனவே!

(வேறு)

மண்முகம் எனப்பொலிந்து
       வளர்ந்த மலைச்சிகரம்
              வரைந்த திசைக்குத் தெற்கிலே
விண்முகம் எனப்பொலிந்து
       விரிந்த கோட்டை, கொத்தளம்
              விளங்கும் திருக்க பிலையில்!

அகன்ற நெடுந்தெருக்கள்!
       அரசர் அரண்மனைகள்!
              அமைந்த கடைத்தெருக்களும்
புகன்ற புகழைச்சொல
       பொழுதுபற் றாமல்மிகப்
              புலம்பிச் சென்றது ரோகிணி!