இரண்டு காணி நிலங்கள்
இணையப் பெற்ற உழவன்
இரைத்தும் உழுதும் உழைத்தும்
வரண்டு விளைதல் இன்றி
வறுமை யுறக் கண்டிடும்
வாழ்க்கை மன்னர்க்கு வந்தது!
ஆல், அரச மரங்கள்
அங்கங்கு நட்டு வளர்க்க
ஆக்கம் தந்தனர் மன்னவர்!
கோல் அரசு வளர்ந்தும்
குழந்தை வளர்ப்ப தற்குக்
கொடுத்துவைக் காதவர் ஆனார்!
|