பக்கம் எண் :

97தமிழ்ஒளி கவிதைகள்

மாயா தேவியின் தவம் :

(வேறு)

“தாயாய் விளங்கும்
       தவம்செய் வேன்”என
மாயா தேவி
       மனத்துட் கொண்டாள்!

தருக்களில் எல்லாம்
       தலைமை பூண்ட
அரச மரத்தின்
       அடியில் அமர்ந்தாள்!

காதல் நிறைந்த
       கண்கள் மூடி
இமய உச்சியை
       உள்ளத் திருத்தி
உலகைக்கடந்த உலகில்
       இலகும் தவத்தில்
இருந்தனள் மங்கையே!

அக்கணம்,
வையக மங்கையும் வாயிதழ் ஆர்ந்து
கையிலை முத்திரை கான்மிசை நிறீஇக்
கண்மலர் கவியக் கானிடம் பொலிய
மெய்த்தவஞ் செய்தாள்! மேன்மைசேர் மைந்தன்
ஒருவன் பிறப்பான் உயிர்களின் துணையாய்!
என்றநம் பிக்கை இரவியாய் வரவே!