|
முத்தமிழ் மன்னர்கள் சோறளித்தார் - நம்
மூதாதை மாந்தர்க்கு வீறளித்தார்!
சித்தத்திற் பொங்கும் நெருப்பளித்தார் - நம்
செந்தமிழ் ஓங்கும் விருப்பளித்தார்!
ஓடும் குருதியில் கொப்புளிக்கும் - அணு
ஒவ்வொன்றும் தமிழ்என்று தான்ஒலிக்கும்!
ஏடு திறந்திடும் பார்; தரணி! - இதோ
எழுதுவீர் இன்றைக்கே போர்ப்பரணி!
‘தமிழர் நாடு’ - 1960
|