|
(வேறு)
வருக வருக படையே
வளர்க வளர்க நடையே
தருக தருக விடையே
தமிழர் தமிழர் இடையே!
(வேறு)
அலையணி வகுத்த படைபோல்
அடலினர் வகுத்த அணியாய்
மலையென நிறைந்த தொகையாய்
மறிகடல் விரைந்த தெனவே!
(வேறு)
ஒழிக இந்தி என்று, சென்றே
ஊர்கள் தோறும் நின்று, கார்
பொழிக என்ற மேகம் என்று
போர்க்குரல் கொடுக்கவே!
(வேறு)
கனக விசயர் தலைமேல்
கல்லை ஏற்றி ஒருநாள்
புனலில் ஆட்டி அணிகற்
புகழை நாட்டி யதுபோல்,
சேரர் தமக்கு நிகராய்த்
தீரர் திரண்ட படையில்
ஊரர் உடன்று வரவே
ஓதை சுழன்று வரவே!
|