|
(வேறு)
பொன்னி வைகை பொங்கு வெள்ளம்
போற் புகுந்து செந்தமிழ்க்
கன்னி யாணை என்று காதற்
காளை ஆணை இட்டிட!
அண்ணன் ஆணை இட்டபோதில்
ஆழி மீதும் மோதுதல்,
திண்ணம் என்று வீரரானோர்
திக்கை யும்இடித் திடக்,
குண்டு மாரி கண்டு நெஞ்சம்
கொஞ்ச மேனும் அஞ்சிடார்!
தொண்டு செய்து சாத லன்றிச்
சூதர் முன்பு கெஞ்சிடார்!
தம்பி என்ற அன்ப ழைப்பில்
தாய ழைப்பைக் கண்டவர்
தெம்பு கொண்டு போர்ப்ப டைக்கண்
சீற்றங் கொண்டு மேயினார்
(வேறு)
வீரர் அணியணி யாய்
வேகங் கொண்டு வர
தீரர் அவர் குரலால்
தில்லி நடுங் கிடவே!
(வேறு)
குண்டுகள் வெடிக்கும் அளவில்!
கொம்புகள் ஒலிக்கும் அளவில்!
தண்டுகள் எடுத்த தமிழர்
தம்முயிர் விடுக்கும் அளவில்!
|