|
(வேறு)
பொங்கும் குருதி
இந்தி வரும் எனவே
எண்ணி இருந் தவர்தம்
புந்தி நடுங் குறவே
பொங்கி வரும் குருதி!
(வேறு)
போர்க்களத்திற் செந்தமிழ்:
பொங்குகின்ற குருதி பொங்கும்
போர்க்களத்திற் செந்தமிழ்!
தங்குகின்ற காட்சி கண்டு
தாளங்கொட்டி ஆடுவீர்!
காளம்ஊது போர்க்க ளத்திற்
கால்பதித்த செந்தமிழ்
தாளமிட்ட வாறுகண்டு
தாளமிட்டே ஆடுவீர்!
கொக்கரிக்கும் போர்க்க ளத்திற்
கொஞ்சிநின்ற செந்தமிழ்
கெக்கலித்த வாறு கண்டு
கெக்கலிக்கைக் கொட்டுவீர்!
சுற்றிநின்ற போர்க்க ளத்திற்
சுற்றுகின்ற செந்தமிழ்
வெற்றிகொண்ட வாறுகண்டு
வீரராகி ஆடுவீர்!
‘தமிழர் நாடு’ - 1960
|