பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 127

கதவை யிடித்துக்
       கடிதம் கொடுத்துக்
*காக்கி யணிந்தோன்
       கடுகி நடந்தான்!
காற்றின் மகனோ
       காக்கி யணிந்தோன்?
கடிதம் பிரிந்து
       கதையாய் வளர்ந்து,
மனத்திரை மீது
       மனிதவாழ் வதனை
நாடக மாக
       நடித்தலும் கண்டு
வரைந்தேன் உலகம்
       வகையுறக் கற்க!
வரைந்த கடிதம்
       வளர்ந்தன நாளும்!
பறந்தது பதிலும்
       பறவையைப் போல!

கண்ணன் இயற்றிடு
       காரிய மெல்லாம்
எண்ண இனிக்கும்
       எழுத இனிக்கும்
உண்ண இனிக்கும்
       உயர்பசுந் தேறல்!

*தபால்காரன்