பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 131

சென்னையிலே!.......

(வேறு)

வீடெனும் பேரொடு
கட்டிய பொந்துகள்
       வீதிதொறும் தெரியும் - சிறு
மாடென ஆடென
மாந்தர் அடைபட;
       மாநகர் சென்னையிலே!

சென்னயைில் உற்ற
       சிறியதோர் வீட்டில்
சிற்றறை யொன்றில்
       ‘சிறைபட் டிருந்தேன்!’

முப்பது ரூபாய் 
       முழுசாய்த் தந்தால்
காற்றும் ஒளியும்
       கணக்கில் கழிக்க,

இருபது ரூபாய்
       எனப்பிறர் கூற
அறைகள் கிடைக்கும்
       அடைந்து கிடக்க!

தண்ணீர் கிடைத்தால்
       தவமும் கிடைக்கும்!
கருமியின் கையைக்
       கருத்தி லிருத்தி

சொட்டுச் சொட்டாய்
       சொட்டும் குழாயில்
எட்டுக் குடித்தனம்
       ஏப்பம் விடுமோ?