|
ஒட்டுத் திண்ணையில்
ஒன்பது வாசல்!
வாசலும் நல்ல
வைகுண்ட வாசல்!
எதற்கும் வாடகை;
எல்லாம் வீடே!
சென்னையில் வீடு
‘சிதம்பர மோட்சம்!’
சென்னையில் உள்ள
சிறிய இடத்தில்
சிற்றறை யொன்றில்
சிறைபட் டிருந்தேன்!
வாடகை தந்து
வரியும் செலுத்தி
ஒருசாண் இடத்தில்
ஒருகால் பதித்து,
நின்று கிடந்தேன்
நெடு நாளாக!
‘கண்ணணைக் காணும்
கடுந்தவ’ மாக
எண்ணி யிருந்தேன் -
எத்தனை நாட்கள்!
|