பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 133

பொழுது புலர்ந்தது!

(வேறு)

புலர்ந்தது பொழுது, கண்ணன்
       புன்னகை ஒளியி னோடு!
அலர்ந்தன மலர்கள் கண்ணன்
       அருள்விழி நோக்கி னோடு!
நிலமெலாம் புதுமை மின்ன
       நெருப்பென எழுந்த வெய்யோன்
“தலமெலாம் விழிக்க நீயும்
       தமிழ்ஒளி - எழுக” என்றான்!

(வேறு)

‘வென்றனன் சூரியன்
வீழ்ந்த திருள்வலி
       வெற்றி முரசொலிப்போம் - இனி
நன்றுநம் கண்ணனும்
நாடி வருந்தினம்
       நாமும் எழுந்திருப்போம்!”
என்றொரு பாடல்
எழுந்தது காற்றினில்
       எங்கும் அதன் ஒலியே - ‘ஒளி”
என்ற குரலதும்
வந்தது காற்றினில்
       என்ன வியப்பிது வோ!

(வேறு)

கண்விழித்தேன் ஆச்சரியம்
கண்ணனவன் நின்றிருந்தான்
மண்விழித்த பேறு
மலர்க்கண்ணன் வந்து நின்றான்!